VYM-avaraikkai.jpg

பல காய்கறிகளும் பல விதமான சத்துகளை நம் உடலுக்கு அளிக்கின்றன. காய்கறிகளில் உள்ள வைட்டமின்களும், தாதுக்களும் உடலுக்கு தேவையான ஊட்டத்தை அளிப்பது மட்டுமில்லாமல் அதில் உள்ள நார்ச்சத்துகள் செரிமானத்திற்கு உதவுகின்றன. காய்கறிகளின் வரிசையில் இப்போது அவரைக்காயைப் பற்றி பார்ப்போம்.


VYM-calcium-need.jpg

நமது உடலில் அதிகம் காணப்படும் தனிமம் கால்சியம் ஆகும். 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 800 மில்லிகிராம் அளவுக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்றும், மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு தினமும் ஆயிரம் மில்லி கிராம் அளவு கால்சியம் வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். பொதுவாகவே 1200 மில்லிகிராம் அளவு தினமும் கால்சியம் எடுக்க வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். உடலுக்கு எதற்கு கால்ஷியம் சத்து அவசியம் தேவைப்படுகிறது?


VYM-Cycling-Benefits-in-Tamil.jpg

மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் தசைகளின் பங்கு முக்கியமானது. உடலின் எலும்புகளோடு தசைகளும், திசுக்களும் பின்னிப் பிணைந்து உருவத்தையும், தொழிலையும் செய்கிறது. தசைகளுக்குப் போதுமான வேலைகள் இருக்கும் போது உடலில் எந்த பாதிப்பும் உண்டாகாது. குறிப்பிட்ட தசைகள் தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்தால் இதனுடன் தொடர்புடைய எலும்புகளும், மூட்டுகளும் பாதிப்படைகின்றன. மிதிவண்டி ஓட்டும் பயிற்சி உடலின் அநேக பகுதிகள் இயங்கும்படியான ஒரு பயிற்சி ஆகும். மிதிவண்டி ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.


VYM-incontinence-1200x630.jpg

சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி சிறுநீர்ப்பையில் சேகரித்து வைக்கப்படுகிறது. சிறுநீர்ப்பையில் உள்ள சிறுநீரின் அளவு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்லும் போது நரம்புகளை தூண்டி சிறுநீரை வெளியேற்றும். ஆனால் சிறுவர்களுக்கு இந்த நரம்பு முழுமையான வளர்ச்சி அடையாததால் அவர்களால் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாது சிலருக்கு பகலிலும் இந்த பிரச்சினை தொடரும். இந்த உபாதையை தீர்க்கும் வழிமுறைகள் இதோ.


VYM-Vallarai-1200x630.jpg

உடல் தேற்றி, உரமாக்கி, சிறுநீர் பெருக்கி, வெப்பமுண்டாக்கி, ருது உண்டாக்கி போன்ற பல பெயர்கள் வல்லாரைக்கு உண்டு. வாதம், வாய்வு, அண்டவீக்கம், யானைக்கால், குட்டம், நெறி கட்டி, கண்டமாலை, பைத்தியம், சூதக் கட்டு, மூளை வளர்ச்சி, சுறுசுறுப்புடன் செயல்பட வல்லாரை மிகவும் பயன்படுகிறது. வல்லாரைக்கீரையை எப்படி பயன்படுத்தி நலம் பெறலாம் என்று இங்கே சில வழிமுறைகளை காணலாம்.


VYM-Cycling-or-Running-1200x630.jpg

உடற்பயிற்சிக்கு மிகவும் ஏற்ற செயல்களாக மிதிவண்டி ஓட்டுதல் மற்றும் ஓடுதல் ஆகிய இரண்டையும் சொல்லலாம். இவை இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியமானவை என்றாலும் இரண்டு உடற்பயிற்சிகள் உடலுக்கும் நல்வாழ்விற்கும் தனித்தனியான பலன்களை தருகின்றன. உடற்பயிற்சிக்கு சிறந்தது ஓட்டமா மிதிவண்டி ஓட்டுதலா? ஒரு ஒப்பீட்டை இங்கே அலசலாம்.


VYM-Low-BP-1200x630.jpg

உடலின் சிஸ்டோலிக் இரத்த அழுத்தமானது 100 mmHg அளவுக்கு குறைவான நிலை தாழ்வு ரத்த அழுத்தம் என்பர்.  சில சமயங்களில் தாழ்வு ரத்த அழுத்தமானது நாளமில்லா சுரப்பிகளின் மாறுபாட்டால் உண்டாகும். இது குறிப்பிட்ட தாழ்வு ரத்த அழுத்தம் என்பர்.  சரியான காரணங்களை பரிசோதித்து நிவர்த்தி செய்தால் தாழ்வு ரத்த அழுத்தம் சரியாகிவிடும். பெரும்பாலான தாழ்வு ரத்த அழுத்தமானது அபாயகரமானது ஆகும். இதற்கான காரணம் தெரியவில்லை எனில் இதனை சரி செய்வது கடினம் ஆகும்.


VYM-8-healthy-foods-1200x630.jpg

ஆரோக்கியம் தரும் உணவு வகைகளை நாமே தயார் செய்து சுத்தமாகவும் சுவையாகவும் உண்ணலாம். அப்படியான உடல் நலம் தரும் 8 உன்னத உணவுகளின் செய்முறைகள் இதோ.


Podugu-venthayam-1200x630.jpg

சபையில் நான்கு பேருக்கு மத்தியில் தலையில் கைவைத்து சொரிந்து கொண்டிருப்பது சங்கடம் தான். பொடுகுத் தொல்லையால் வரும் இந்த வேதனை சொல்லி மாளாது. பொடுகைப் போக்கும் எளிமையான சிகிச்சை இதோ.


Thamboolam-1200x630.jpg

தாம்பூலம் என்றாலே எல்லோரது நினைவுக்கும் வருவது கல்யாணத்துக்கு சென்று திரும்பும்போது வாசலில் நிற்க வைத்து கையில் திணித்து அனுப்பும் ஒரு பை என்பது மட்டுமே. ஆனால் இது ஒரு பண்பாட்டுச் சின்னமும், மரியாதைக்கு உரிய ஒரு பழக்கமுமாகும். முன்பெல்லாம் குழந்தைகள் தவிர மற்ற எல்லா வயதினரும் அதை பழக்கமாக கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போதோ? தாம்பூலத்தில் சிறப்பைப் பற்றி வாசிப்போம் வாருங்கள்.