Narchaththu.jpg

நார் சத்துக்கள் நம் உடலுக்கு தேவைப்படும் ஒரு முக்கியமான சத்து ஆகும். ஊட்டச்சத்துகளில் ஒன்றான கார்போஹைட்ரேட் என்றழைக்கப்படுகின்ற மாவு சத்துக்களில் ஒன்று தான் நார்ச்சத்துகள். இவை உடலில் செரிக்க இயலாத மாவுச்சத்து வகை ஆகும். இவ்வகை உணவுப் பொருள்களில் நார்கள் போன்ற அமைப்பு கொண்டுள்ளதால் இதனை நார்ச்சத்துகள் என்கிறோம். பொதுவாக நார்ச்சத்துகள் முழுத்தானியங்கள், பழங்கள் மற்றும் கீரைகள் போன்ற இயற்கை உணவுகளில் கிடைக்கின்றது.


VYM-Water-Importance.jpg

கோடை காலத்தில் உடல் வெப்பநிலை அதிகமாகி அதனால் உண்டாகும் வெப்ப அதிகரிப்பை குறைக்க நாம் தண்ணீர் அருந்துவோம். இல்லையென்றால் குளிர்ச்சியான நீரை மேலுக்கு உடலில் கொட்டி வெப்ப இழப்பை சரி செய்வோம். ஏதாவது ஒரு வழியில் உடல் வெப்பநிலையைக் குறைக்க முயற்சிப்போம். நெருங்கி வரும் கோடை காலத்தை எதிர்கொள்ள நாம் நிறைய நீர் அருந்துவோம். இதனால் உடல் எப்படி பாதுகாக்கப்பட்டு இயங்குகிறது என்று பார்ப்போம்.


VYM-Viratham.jpg

இயற்கை மீதான பேரன்பும், உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் நம்மாழ்வார். சிறிய எழுத்துக்களையும் கண்ணாடி இல்லாமல் துல்லியமாகப் படிப்பது, சோர்வே இல்லாமல் பல கிலோ மீட்டர் தூரம் நடப்பது, தோட்ட வேலை, எழுத்துப் பணி, மேடைப்பேச்சு என ஒரு நாளைக்கு 16 மணி நேரம் பம்பரமாகச் சுழன்றவர் நம்மாழ்வார்.

“எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாலேயே உணவே மருந்து, மருந்தே உணவு என்று திருமூலர் சொல்லிட்டு போய்விட்டார். அந்த அற்புதமான வாக்கை ஆராதிக்கத் தவறியவர்கள் தான் எண் சாண் உடம்பில் எண்ண முடியாத வியாதிகளோடு அலையுறாங்க. வாழ்க்கையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நோயே வராமல் வாழ்வது. இரண்டாவது நோய் வந்த பின் வருந்தியபடியே வாழ்வது. முதல் வகையில் இணைந்துவிட்டால் நமக்கு இன்னல்கள் இருக்காது” – இது நம்மாழ்வாரின் வரிகள். உணவே மருந்து என்று வாழ்ந்து காட்டிய நம்மாழ்வார் விரதம் என்னும் உண்ணாநோன்பை கடைபிடித்தே நோய் நொடியில்லாமல் சுறுசுறுப்பாக வாழ்ந்து காட்டியவர்.

உணவை எப்போது சாப்பிட வேண்டும் என்று கூறும் திருக்குறள்

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”

மேற்கண்ட குறளிலேயே நோய் அண்டாமல் வாழ்வதற்கு வழி சொல்லப்பட்டு இருக்கிறது. உண்ட உணவு சீரணமாகிவிட்டதை உணர்ந்து, அறிந்து, அதன் பிறகே உண்டால் அந்த உடம்புக்கு மருந்து என்ற ஒன்றே தேவை இல்லை என்பதே இந்த குரல் சொல்லும் உண்மை.

எதை எப்போது எப்படி உண்ண வேண்டும் என்பதே நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நாம் உண்ணும்போது முதலில் உணவை விழுங்குகிறோம். ஆனால் அப்படி விழுங்கக்கூடாது. பற்களால் நன்றாக அரைத்து கூழாக்கி உமிழ்நீரோடு சேர்த்து உள்ளே தள்ளவேண்டும். இதைத்தான் “நொறுங்கத் தின்றால் நோய் தீரும்” என்ற பழமொழி சொல்லுகிறது. அளவு கடந்து உணவு உண்பவர்கள் நோய்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். நாம் உண்ணும் உணவுக் கழிவுகள் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கொஞ்சம் கொஞ்சமாக தேங்குகிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது நோய் உண்டாகிறது சரி அதை எப்படிக் களைவது? இதற்கான சுலபமான வழி உண்ணாநோன்பு. இதைதான் “விரதம்” என்ற பெயரில் நமது முன்னோர்கள் கடைபிடித்தார்கள்.

தெரபியூட்டிக் ஃபாஸ்டிங் என்னும் உண்ணாநோன்பு

“நோயினால் படுப்பதென்ன கண்ண பரமாத்மா,
நோன்பினால் உயிர்ப்பது என்ன கண்ண பரமாத்மா”

எனப் பாடினார்களே அந்த நோன்பு தான் உண்ணாநோன்பு. இறக்கும் தருவாயில் இருப்பவனை கூட உயிர்த்தெழச் செய்யும் சக்தி உண்ணா நோன்பிற்கு இருக்கிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் “தெரபியூட்டிக் ஃபாஸ்டிங்” (Therapeutic Fasting) என்று சொல்கிறார்கள். சர்வதேச அளவில் இந்தச் சிகிச்சை பிரபலமாகி வருகிறது. உண்ணாநோன்பு இருக்கும்போது நம் உடலுக்குள் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் தன்னாலே வெளியேறி விடுகின்றன. உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும்.

உணவு குறித்து நம்மாழ்வாரின் சில கூற்றுகள்

“நான் 35 வயதில் கண்ணாடி அணிந்தேன், 60 வயதில் அதை அகற்றிவிட்டேன். இப்போது கண்ணாடியைப் பயன்படுத்துவதே இல்லை. பொடி எழுத்துக்களைக் கூட என்னால் துல்லியமாக வாசிக்க முடியும். இதற்கு காரணம் எனது உணவு பழக்கவழக்கங்கள் தான்”, என்று நமக்கு வியப்பான ஒரு உண்மையை சொல்கிறார் நம்மாழ்வார்.

இயற்கை நமக்கு கொடுத்த அருட்கொடை மூலிகைகள். நாம் பயிர் செய்யாமலேயே நமக்கான உணவாக சில மூலிகைகளை இயற்கை உற்பத்தி செய்கிறது. உதாரணமாக, பிரண்டைத் துவையல் செய்து சாதத்தில் குழம்புக்கு பதிலாக பிசைந்து உண்ணலாம். தூதுவளை, முசுமுசுக்கை இலைகளைச் சேர்த்து ரசம் வைத்து உண்டால் நாள்பட்ட சளி தீரும். வாய்ப்புண்ணை ஆற்ற வெட்டுக்காயப் பச்சிலை. அனைத்துக்கும் சிறந்த ஆவாரை, துளசி என மூலிகைகளின் அதிசய ஆற்றல் கொஞ்சநஞ்சம் அல்ல. நம்மை சுற்றி வளர்ந்து கிடக்கும் எண்ணில்லா மூலிகைகளை நாம் சரியாக பயன்படுத்தினாலே நோய்கள் காணாமல் போய்விடும் என்று நம்மாழ்வார் கூறுகிறார்.

உடலின் மகத்துவம் பற்றியும், யோகாவின் சிறப்பை பற்றியும் நம்மாழ்வார் கூறியவை

இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை. பசி வந்தால் உணவு, தாகம் எடுத்தால் தண்ணீர், சோர்வு வந்தால் உறக்கம் என உடல் சரியான சமிக்ஞைகளை நமக்கு கொடுத்தவண்ணம் இருக்கிறது. அதன்படி உணவு, உறக்கத்தை நாம் கடைப்பிடித்தாலே உடலுக்கு எந்தவிதமான சிக்கலும் வராது. பலர் வலிக்காக மாத்திரை மருந்துகளை உட்கொள்கிறார்கள். வலி என்பது உடம்பு தன் உள்ளே இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றும் முயற்சி அதைத் தடுக்கக்கூடாது. 50 வயது வரை உடம்புதான் உன்னதம் என நினைக்கும் மனது அதற்குப் பிறகு ஆன்மாவை ஆராதிக்கிறது. ஆன்மா இந்த உடம்புக்குள்ளே தான் இருக்கிறது. அதனால் உடலைப் பராமரிப்பதும் அவசியம் ஆகும் என்று நம்மாழ்வார் நமக்கு நினைவூட்டுகிறார். இந்த இரண்டையும் ஒரே இடத்தில் பராமரிக்க உதவுவது யோகா என்பதை அழுத்தமாக பதிவு செயகிறார். தினமும் காலை நடைப்பயிற்சியும், மூச்சுப் பயிற்சிக்கு யோகா செய்வதாக நமக்கு அவர் கூறுகிறார்.

சரியாக பழக்கவழக்கங்களும், உணவு முறையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலும்இருந்தாலே நோய்க்கு நோ என்ட்ரி போட்டுவிடலாம் என சொல்லும் நம்மாழ்வார் இறுதியாக கணியன் பூங்குன்றனார் சொன்ன தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிற வரியை குறிப்பிடுகிறார். நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒருசேர வழிகாட்டக் கூடியது இந்த சொற்கள் என்றும், அந்த வரிகளை மனதில் ஏற்று, இயற்கையை வணங்கி, உடலை ஆராதிக்கக் கற்றுக்கொண்டால் வாழ்வின் சிறப்புக்கு குறைவே இருக்காது என்று கூறி நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார் நம்மாழ்வார்.

 


VYM-Groundnut-Siddha.jpg

நிலக்கடலை குறித்த மூடநம்பிக்கைகளும், அவநம்பிக்கைகளும் இந்தியா முழுவதும் நிறைந்து உள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியை சுற்றி உள்ள பறவைகள், என எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவதை நாம் கவனித்து இருப்போம். வாருங்கள் நிலக்கடலையில் அருமை பெருமைகளை இந்த கட்டுரையில் வாசிக்கலாம்.


VYM-malachikkal.jpg

நலமான ஒருவர் தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை மலத்தை கழித்து உடலை சுத்தப்படுத்திக் கொள்வார். ஒரு சில காரணங்களால் சில நாட்களில் நாட்கள் மலத்தை கழியாமல் குடலில் தேக்கி வைக்கும் நிலைக்கு தான் மலச்சிக்கல் என்று பெயர்.


VYM-typhoid.jpg

“சால்மோனெல்லா” என்னும் பாக்டீரியாக்களால் டைபாய்ட் காய்ச்சல் வருகிறது. மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் தான் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவுகிறது. முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கால்வலியுடன் நோய்  தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். பசி குறையும், குமட்டல், வாந்தி, வயிற்று வலி, ஆகியவற்றின் தொல்லை இருக்கும். உடல் சோர்வடையும். சரி, டைபாய்டு ஏற்பட்டால் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்?


VYM-Othadam.jpg

சித்த மருத்துவத்தில் ஒற்றடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றும் நம் வீடுகளில் வலிகளுக்கு ஒற்றடமும், சுளுக்கு மற்றும் ரத்தக்கட்டுக்கு ஐஸ்கட்டி எனப்படும் குளிர்ந்த நீரோட்டம் கொண்டு ஒற்றடம் வைக்கும் வழக்கம் உள்ளது. புற மருத்துவ சிகிச்சையில் ஒன்றான ஒற்றடம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெப்பத்தை உண்டாக்கப் பயன்படுகிறது. சுண்ணாம்புக்காரை, தவிடு, செங்கல்பொடி, மணல், மூலிகை இலைகள் முதலியவற்றில் ஏதாவது ஒன்றை வறுத்து துணியில் முடிந்து நோயுள்ள இடத்தில் ஒற்றி எடுத்தல் இலைக்கிழி ஒற்றடம் எனப்படுகிறது.


VYM-TW-LI-fracture-kattu.jpg

சித்த மருத்துவத்தில் கட்டு கட்டுகின்ற முறை  ஒருவகை புற மருத்துவம் ஆகும்.  கட்டு மருத்துவம் பல வகைப்படும். எலும்பு முறிவு ஏற்படும் போது எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதியை  துல்லியமாகச் சேர்த்து, முறையாக துணி சுற்றி, எலும்புப் பகுதி விலகாமல், மூங்கில் பட்டை போன்றவற்றை வைத்து எலும்புக்கூடும் வரை கட்டு போடுவது எலும்பு முறிவு கட்டு அல்லது என்பு முறிவு கட்டு மருத்துவம் என்று அழைக்கப்படுகிறது.


VYM-Vit-D-Deficiency-Tamil.jpg

விட்டமின்-டி என்பது கொழுப்பில் கரையக்கூடிய ஒரு விட்டமின் வகை ஆகும். கால்சியம் மற்றும் பாஸ்பரசை உறிஞ்சி சரியான நோயெதிர்ப்பு மண்டலத்தை அது உருவாக்கிறது. வலுவான எலும்புகளுக்கு இந்த வைட்டமின் மிகவும் அவசியமாகும். விட்டமின்-டி இரண்டு பிரிவுகளைக் கொண்டது. அதில் D-2 உணவிலிருந்தும், D-3 சூரிய ஒளியிலிருந்தும் கிடைக்க கூடியதாகும். விட்டமின்-டி குறைபாடு தோன்றாமல் இருக்க விட்டமின்-டி சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது அவசியமாகும்.


VYM-Trekking-in-Tamil.jpg

இன்றைக்கு மாடிப்படி ஏறினாலோ நமக்கு மூச்சு முட்டுகிறது. ஆனால் நம் பாட்டன், பூட்டன்கள் காட்டு பாதைகளைக் கடந்து கரடு முரடான மலைகளில் ஏறி சிகரத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனை தரிசித்து விட்டு  வீடு திரும்பியதை கதை கதையாகச் சொல்ல கேட்டிருப்போம். என்னுடைய தாத்தா கம்பு விதைத்துவிட்டு திருப்பதி கிளம்புவார், நடை பயணம் சென்று உச்சி மலை ஏறிய பிறகு  அவர் திரும்பி வருகையில் கதிர் விளைந்திருக்கும், வந்ததும் அறுவடைக்கு தயாராவார்  என கிராமத்து அம்மாக்கள் பூரிப்புடன் சொல்வார்கள். உடலுக்கு ஏற்றம் தந்த மலையேற்றம் பற்றி தொகுப்பு இதோ.