தாம்பூலம் என்று சொல்லப்படும் வெற்றிலை பாக்கு உடலுக்கு நல்லதா?

Thamboolam-1200x630.jpg

தாம்பூலம் என்றாலே எல்லோரது நினைவுக்கும் வருவது கல்யாணத்துக்கு சென்று திரும்பும்போது வாசலில் நிற்க வைத்து கையில் திணித்து அனுப்பும் ஒரு பை என்பது மட்டுமே. ஆனால் இது ஒரு பண்பாட்டுச் சின்னமும், மரியாதைக்கு உரிய ஒரு பழக்கமுமாகும். முன்பெல்லாம் குழந்தைகள் தவிர மற்ற எல்லா வயதினரும் அதை பழக்கமாக கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போதோ? தாம்பூலத்தில் சிறப்பைப் பற்றி வாசிப்போம் வாருங்கள்.

காம்பு கிள்ளிய வெற்றிலையின் மீது சுண்ணாம்பை கொஞ்சமாக தடவி கூடவே கொட்டைப்பாக்கை வைத்து, வாசனைக்கு ஏலக்காயினை வைத்து, மடித்து வாய்க்குள் செருகி மென்று தின்பதே சிறப்பாக இருக்கும். இந்த காலத்தில் வெற்றிலை பாக்கா?….இப்படி நினைப்பு வருவது இயல்பு தான் இல்லையா!

தாம்பூலத்தை பற்றி இந்த தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். வெற்றிலை, பாக்கு இவை இரண்டும் இயற்கையில் விளைபவை தான். சுண்ணாம்புச் சத்து உடலுக்கு அவசியமான ஒரு சத்தாக இருப்பதால் தீங்கு விளைவிக்காது. இவை மூன்றையும் சேர்த்து மெல்லும்போது அழகும் சுவையும் மணமாகவும் இருப்பதாலும், உடலுக்கு நன்மை செய்யக் கூடியதாக இருப்பதாலும், அது ஒரு பண்பாட்டு சின்னமாகவே கருதப்படுகிறது.

ஆனால் வெற்றிலைப்பாக்கு எனப்படும் தாம்பூலம் ஒரு கெட்ட பழக்கமாகவே இன்றும் பார்க்கப்படுகிறது அது ஏன்?

முதலில் தீங்கற்ற துவர்ப்புச் சுவைகொண்ட பாக்கை வர்த்தக நோக்கத்திற்காக தீங்கானதாக மாற்றி அதன் நிறத்தை கவர்ச்சியாக்க ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. அதனால்தான் இங்கே இதனை தவிர இயற்கையான கொட்டைப் பாக்கில் எந்த தீங்கும் கிடையாது என்கிறோம்.

அதே சமயம் புகையிலை மண்ணில் இயற்கையில் விளையும் தாவரம் என்றாலும் நச்சுத்தன்மை கொண்டதால் அது மனிதன் உண்ணக் கூடிய தாவரம் அல்ல. அதனால்தான் புகையிலைச் சாற்றை விழுங்க முடியாது, வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மட்டும் போட்டால் அதன் சாற்றை விழுங்க முடியும் என்கிறோம். விழுங்கவும் வேண்டும் அதுதான் நல்லது.

ஆனால் தாம்பூலத்துடன் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் புகையிலையும் சேர்த்துப் போட்டு அதன் சுவையையும், பயனையும் நாசமாக்கி விட்டார்கள். ஒரு கெட்ட பழக்கமாக புற்று நோயை உண்டுபண்ணக் கூடிய கொடிய புகையிலையை போலல்லாமல் காணும் இடங்களில் எல்லாம் துப்பி அதனை ஒரு அருவருப்பான செயலாக மாற்றி விட்டார்கள். இந்த அரிய பண்பாட்டு ரீதியான வெற்றிலைப் பாக்கு போடுவதில் எந்த தவறும் இல்லை என்பது தான் சித்தர் வாக்கு.

தனியான, சுத்தமான கொட்டைப் பாக்கு சேர்த்து தாம்பூலம் போடுவது அழகானதும், சுவையானதும், ஆரோக்கியமானதும்,  ஒரு நல்ல பழக்கமும் ஆகும். எனவே நல்ல தாம்பூலம் போடுவது கடைபிடிப்போம், புகையிலை பழக்கத்தை எந்த வடிவிலும் தவிர்த்து ஒழிப்போம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *