சித்த மருத்துவம்

சித்த மருத்துவ முறை


சித்த மருத்துவ முறை ஒரு முழுமையான மருத்துவ முறை ஆகும். சீரான ஒழுக்கத்துடன் வாழக்கை முறையை வைத்துக் கொண்டு, உடல் நலனை பேணுதல் என்பதையே முதன்மை கூறாகக் கொண்டு இயங்கும் ஒரு மருத்துவ முறை ஆகும். தமிழ் பேசும் நிலமான நாவலந் தீபகற்பத்தில் (இந்திய) பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி நெறிப்படுத்தப்பட்ட ஒரு மருத்துவ முறை ஆகும்.


மேலும் அறிய

சித்த மருத்துவ தத்துவத்தின் படி நோயென்றால் என்ன?


வாதம், கபம், பித்தம் ஆகிய மூன்று உயிர்தத்துவங்களும் முறையே வளி (காற்று), அழல் (நெருப்பு), ஐயம் (நீர்) ஆகிய தத்துவங்களுடன் தொடர்புடையன. உடலின் உள்ளுக்கு இருக்கும் இந்த மூன்று உயிர்தத்துவங்களும் புறத்தில் – அண்டத்தில் உள்ள ஐம்பூதங்களுடனும் எப்போதும் தொடர்பு நிலையைக் கொண்டிருக்கும். இந்த தொடர்பு தான் நம் உடல் நலனையும், உள்ள நலனையும் தீர்மானிக்கிறது.


மேலும் அறிய

சித்த மருத்துவத்தில் நோயறியும் முறை


இரத்தப் பரிசோதனை முறைகள், ஸ்கான் ரிப்போர்டுகள், போன்ற நவீன நோய் கண்டறியும் முறைகளையும் நோயின் தன்மைக்கும், தேவைக்கும் ஏற்ப தற்கால சித்த மருத்துவ முறைகளில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பாரம்பரியமாக சித்த மருத்துவ முறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் முறைகளும் அவசியம் கடைபிடிக்கப்பட்டு தொடரப்படுகின்றன. இந்த பாரம்பரிய முறைகள் சித்த மருத்துவதிற்கென தனித்துவமானவை.


மேலும் அறிய

18 சித்தர்கள்


சித்த மருத்துவத்தை முன்னெடுத்த அறிஞர் பெருமக்கள் சித்தர்களாக அறியப்படுகிறார்கள். தொல்காப்பியத்தில் அறிவன் என்னும் சொல் சித்தர்களைக் குறிப்பதாக ஆய்வறிஞர்கள் கருதுகிறார்கள். அரசையும் மக்களையும் நெறிப்படுத்திய சித்தர்கள் பல்லாயிரக்கணக்கில் இருப்பினும் நவ சித்தர்கள் என்றும், நவ கொடி சித்தர்கள் என்றும் பல வகைப்பாடுகள் காணப்படினும் அதி முக்கிய சித்தர்களாக பதினெட்டு சித்தர்களே வல்லுனர்கள் குறிக்கப்படுகிறார்கள். அவர்களைப் பற்றிய குறிப்புகள்.


மேலும் அறிய