சித்த மருத்துவர்

மருத்துவர் வேலாயுதம்

B.S.M.S., M.D (Siddha), Ph.D., M.B.A (Hospital Management)

மருத்துவரை சந்திக்க

அழைக்கும் நேரம்




மருத்துவரை அணுக

தொடர்புக்கு






மருத்துவர் வேலாயுதம் சித்த மருத்துவ பட்டம் பெற்ற ஒரு சித்த மருத்துவர் ஆவார். சென்னையில் உள்ள பிரபல அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் தனது பட்டப்படிப்பினையும் (Graduation), பட்ட மேற்படிப்பினையும் (Post Graduation) மருத்துவர் வேலாயுதம் மேற்கொண்டார்.

சித்தர் இலக்கியங்களின் மேல் உள்ள தீராத விருப்பத்தினாலும், நமது பாரம்பரிய மருத்துவ முறையைப் பற்றி மென்மேலும் அறிய வேண்டும் என்ற அவாவும் சேர்ந்து, தமிழ் ஓலைச்சுவடிகளை படிக்கும் முறைகளை பட்டப்படிப்பு படிக்கும் காலத்தே கற்றுத் தேர்ந்தார். பழைய சுவடிகளில் உள்ள எழுத்து முறைகளை செவ்வனே படிக்கத்தெரிந்த அறிவை பயன்படுத்தி, நடுவண் அரசின் கீழ் இயங்கும் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் பாரத் இன்ஸ்டிடியூட் ஆஃப்ஹையர் எஜுகேஷன் ஆண்டு ரிசர்ச் என்ற கல்வி நிறுவனத்தில் தனது ஆராய்ச்சிப் படிப்பான Ph.D-ஐ (Doctorate) முடித்தார்.

மருத்துவர் வேலாயுதம் அவர்களுக்கு ஆசிரியர் பணி மீது அளவுகடந்த பற்றுண்டு. அடுத்த தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் தான் சித்த மருத்துவ முறையை எதிர்கால தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருப்பவர். தாம்பரத்தில் இயங்கும் மைய அரசின் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் நிர்வாக பொறுப்பில் இருந்ததாலும், பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு மருந்துகள் தயாரிக்கும் இம்ப்காப்ஸ் (IMPCOPS) என்ற பிரபலமான நிறுவனத்தில் பொறுப்பில் இருந்ததாலும், சித்த மருத்துவ முறையில் பிணி சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஆவல் அவருக்கு இருந்தது. பெரிய மருத்துவக் கழகங்களை நிர்வகிக்கும் திறனும், அதில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக “மருத்துவ மேலாண்மை” பட்ட மேற்படிப்பை அழகப்பா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார்.

மருத்துவர் வேலாயுதத்தின் ஆராய்ச்சிப் படிப்பும் ஆய்வுக் கட்டுரைகளும் வெளுப்பு நோயை மையமாகக் கொண்டு அமைந்தது. வயதுக்கு வந்த இளம் பெண்களுக்கும், மகளிருக்கும், இரும்புச் சத்து இழப்பினால் உடல்நலக் குறைபாட்டை ஏற்படுத்தும் ஒரு தேசிய அளவிலான பிரச்சனையாக வெளுப்பு நோய் இருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். நோய் கட்டுப்பாட்டிற்கும், நோய் தடுப்புக்கும் மருத்துவர் வேலாயுதம் அவர்கள் ஆற்றிய பணி மிகப்பெரியது.

டெங்கு நோய் மற்றும் பன்றிக்காய்ச்சல் நோய்கள் குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வும், அதற்கான எளிய மருத்துவ முறைகளும் அவருக்கு புகழை தேடித் தந்தன. “எச்ஐவி பாதித்த நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை சித்த மருந்துகள் கொண்டு உயர்த்துவது” என்ற  முன்னோடி ஆராய்ச்சியை அவர் உலகப் புகழ்பெற்று விளங்கிய, காலம் சென்ற மருத்துவர் பேரா. சி. என். தெய்வநாயகம் அவர்கள் துணையோடு மேற்கொண்டது பெரிய அளவில் செய்தியாகிய அரும் செயல் ஆகும்.

சித்த மருத்துவர் வேலாயுதம் அவர்கள் இதுவரை ஒன்பது புத்தகங்களை எழுதி அச்சிலேற்றி உள்ளார். அவரது புத்தகங்கள் சித்த மருத்துவத்தை பற்றிய விஷயங்களை மட்டுமில்லாமல் உணவு, வர்மம், சித்த மருத்துவத்தின் வரலாறு ஆகிய விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. தினமணி, தினத்தந்தி, மாலை முரசு போன்ற பிரபல தமிழ் நாளிதழ்களிலும், டாக்டர் விகடன், அவள் விகடன், தேவி போன்ற தமிழ் வார இதழ்களிலும் அவரது கட்டுரைகள் நிறைய வந்துள்ளன. சித்த மருத்துவம் குறித்த பல தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சித்த மருத்துவர் வேலாயுதம் தோன்றியதால், நேயர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். அதனால் சென்னையின் பிரபல சித்த மருத்துவர் என்று மட்டும் இல்லாமல் உலகில் பிரபலமான சில சித்த மருத்துவர்கள் என்ற பட்டியலில் இவர் உண்டு என்று சொன்னால் அது மிகை ஆகாது. தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு முறைகளில் மருத்துவர் வேலாயுதம் ஆற்றிய பங்கு ஆவணப்படுத்தப் பட்ட ஒன்று என்றே சொல்ல வேண்டும். பல தமிழ் தொலைக்காட்சிகளில் தோன்றி டெங்கு காய்ச்சலும், பன்றிக் காய்ச்சலும் வராமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் கூறிய விதம் தமிழ்நாட்டில் பொதுவாகவே இந்த இரண்டு நோய்களுக்கு எதிராக மக்கள் பாரிய அளவில் விழிப்படைய உதவியது என்று சொன்னால் அதுவும் மிகை ஆகாது.


மருத்துவர் வேலாயுதம் அவர்களை

பற்றி மேலும் அறிய

  • மருத்துவர் வேலாயுதம் அவர்களின் ஆய்வு அனுபவங்கள்
  • வகித்த பதவிகள்
  • மருத்துவர் வேலாயுதம் பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
  • ஊடகத்தில் மருத்துவர் வேலாயுதம்
  • மருத்துவர் வேலாயுதம் எழுதிய நூல்கள்
மருத்துவர் வேலாயுதம் அவர்களின் ஆய்வு அனுபவங்கள்

ஆய்வு மாணாக்கராக இருந்த காலம் தொட்டே மருத்துவர் வேலாயுதம் தன்னை ஆராய்ச்சி பணிகளில் உட்படுத்திக் கொண்டதால் விரைவில் முனைவர் பட்டம் பெற்றார். “வெளுப்பு நோயை குணப்படுத்த கடுக்காய் மாத்திரை மேலாண்மை” என்ற ஆய்வு அவருக்கு முனைவர் பட்டத்தைப் பெற்றுத் தந்தது…(மேலும் படிக்க)

வகித்த பதவிகள்

மருத்துவர் வேலாயுதம் தனது பட்டப்படிப்புகளை முடித்த பிறகு உடனே மருத்துவப் பணிகளை பார்க்கத் தொடங்கிவிட்டார். 2002-ம் ஆண்டு, சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவ ஆசிரியர் பணியில் சேர்ந்து கற்பிக்கத் தொடங்கினார். சித்த மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற அவரது கனவு கனியும்போது …(மேலும் படிக்க)

மருத்துவர் வேலாயுதம் பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

தனது பள்ளிப் பருவத்திலிருந்தே மருத்துவர் வேலாயுதம் அவர்கள் தமிழ் மொழி, அதன் இலக்கியம், பண்பாடுகளில் அதீத ஆர்வம் காட்டினார். பள்ளிப் பருவத்தில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகள் பலவற்றில் அவர் வாங்கிய பல பரிசுகளே இதற்குச் சான்றாகும்.

சென்னை பூவிருந்தவல்லியில் இயங்கும் தமிழ் பண்பாட்டுக் கழகம் (Tamil Cultural Forum) என்ற அமைப்பு அவருக்கு “சித்த மருத்துவப் பேரொளி” என்ற பட்டத்தையும், தேசிய தமிழ் அறிஞர்கள் கூட்டமைப்பும், கவிக்குயில் மாத இதழும் கூட்டாகச் சேர்ந்து, 2015ம் ஆண்டு அவருக்கு “சித்த மருத்துவ நாவலர்” என்ற பட்டத்தையும் வழங்கின.

2017-ம் ஆண்டு புகழ் பெற்ற அரிமா சங்கம் அவருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” என்ற விருதினை வழங்கியது.

சித்த மருத்துவத் துறையில் ஈடு இணையற்ற சாதனை புரிந்தமைக்காக தனவந்தரி என்ற கௌரவத்தை வடலூரில் உள்ள அனைத்திந்திய சித்த மருத்துவர்களின் கூட்டமைப்பு 2014-ம் ஆண்டு மருத்துவர் வேலாயுதம் அவர்களுக்கு வழங்கியது.

ஊடகத்தில் மருத்துவர் வேலாயுதம்

பல பிரபல தமிழ்த் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மருத்துவர் வேலாயுதம் அவர்கள் தோன்றி நோய்களை எப்படி கண்டறிந்து கட்டுப்படுத்துவது என்று பல சமயங்களில் கருத்துக் கூறுவதால் அவரைப் பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்கிறது. ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எதற்கு உட்கொள்ளவேண்டும் என்பது குறித்து பல கட்டுரைகளை அவர் தமிழ் பத்திரிகைகளில் எழுதியுள்ளார்…(மேலும் படிக்க)

மருத்துவர் வேலாயுதம் எழுதிய நூல்கள்

மருத்துவர் வேலாயுதம் அவர்களுக்கு எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. உடல் நலம், உணவு, மருந்து, ஆகிய தலைப்புகளில் பல கட்டுரைகளை  தொடர்ந்து பல பிரபல தமிழ் பத்திரிக்கைகளுக்கு எழுதிக் கொண்டு வருகிறார். பல புத்தகங்களை எழுதி அதனை அவர் அச்சிலும் ஏற்றியிருக்கிறார். அவர் எழுதி வெளியிட்ட சில புத்தகங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன…(மேலும் படிக்க)