படுக்கையில் சிறுநீர் கழித்தலை கட்டுப்படுத்துவது எப்படி?

VYM-incontinence-1200x630.jpg

சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி சிறுநீர்ப்பையில் சேகரித்து வைக்கப்படுகிறது. சிறுநீர்ப்பையில் உள்ள சிறுநீரின் அளவு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்லும் போது நரம்புகளை தூண்டி சிறுநீரை வெளியேற்றும். ஆனால் சிறுவர்களுக்கு இந்த நரம்பு முழுமையான வளர்ச்சி அடையாததால் அவர்களால் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாது சிலருக்கு பகலிலும் இந்த பிரச்சினை தொடரும். இந்த உபாதையை தீர்க்கும் வழிமுறைகள் இதோ.

கட்டுப்படுத்துதல்

பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்கள் பெரியவர்களாக ஆகும்போது இந்த பிரச்சனை சரியாகிவிடும். இது சில குழந்தைகளுக்கு இதனால் தாழ்வு மனப்பான்மை உண்டாகும். குழந்தைகள் 5 வயது ஆகும்போது ஏறக்குறைய இந்த பிரச்சனை சரியாகிவிடும். அதற்கு மேலும் இந்த பிரச்சனை தொடருமானால், சிறுநீரக உறுப்புகளில் ஏதாவது பிரச்சனையா என்று மருத்துவரிடம் சென்று பார்க்கவும்.

தினசரி வாழ்க்கை

அதிகப்படியான நீரை தூங்குவதற்கு முன் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்காதீர். மேலும் படுக்கப்போகும் முன் சிறுநீர் கழித்துவிட்டு வரச் சொல்லுங்கள். இது ஓரளவு பிரச்சனையை தீர்க்க உதவும்.

நரம்பழுத்தப் பயிற்சி / யோகாசன பயிற்சிகள்

தொப்புளுக்கு சற்று கீழே உள்ள பகுதியில் அழுத்தம் தரலாம். இந்த நரம்பழுத்தப் பயிற்சிகள் உடல் பலப்பட உதவும். சில வகை யோகாசனப் பயிற்சிகளும் மூத்திரப்பை பலப்பட உதவும். குழந்தைகளை சிறு வயதில் இருந்தே யோகப் பயிற்சிகளில் ஈடுபடுத்துவது அவர்கள் வாழ்வில் ஒரு ஒழுங்கு ஏற்படவும் பெரிய உதவி புரியும்.

இடுப்புத் தசை பயிற்சி / Pelvic Exercises

இடுப்புத் தசை பயிற்சி எனப்படுவது பிட்டத்தினை இறுக்கி லேசாக மூச்சடக்கி மேலே இழுத்தால் உணரப்படும் பயிற்சி முறையே ஆகும். ஆங்கிலத்தில் இதனை பெல்விக் பயிற்சி (Pelvic Exercises) என்று சொல்லுவார்கள். இந்த பயிற்சி செய்வதால் மூத்திரப்பை பலப்படும். இந்த பயிற்சியை ஒவ்வொரு வேலைக்கு 10 எண்ணிக்கைக்கு ஒரு நாளைக்கு 4-5 முறை செய்துவந்தால்  நாளடைவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பது நிற்கும்.