மலச்சிக்கலை புரிந்துக் கொள்வோம்

VYM-malachikkal.jpg

நலமான ஒருவர் தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை மலத்தை கழித்து உடலை சுத்தப்படுத்திக் கொள்வார். ஒரு சில காரணங்களால் சில நாட்களில் நாட்கள் மலத்தை கழியாமல் குடலில் தேக்கி வைக்கும் நிலைக்கு தான் மலச்சிக்கல் என்று பெயர்.

மலச்சிக்கலில் உள்ள வகைகள்

இயக்க மாறுபாட்டினால் உண்டாகும் மலச்சிக்கல்

குறிப்பிட்ட சில உணவுகள் வயிற்றுத் தசைகளுக்கு மந்த தன்மையை உண்டாக்கி அதனால் மலத்தை வெளித்தள்ள தேவையான அழுத்தம் கிடைக்காமல் போகும். எனவே மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வை அது உண்டாக்காது. ஒரு சிலருக்கு கழிப்பிடம் செல்ல வேண்டும் என்ற உணர்வு இருக்கும். ஆனால் சென்று உட்கார்ந்தால் மலம் வெளிவராது. சில நேரங்களில் மன அழுத்தத்தால் குடலில் விரைப்புத்தன்மை உண்டாகி அதனால் மலச்சிக்கல் உண்டாகும். இந்த மாதிரியான மலச்சிக்கலை வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் சரிசெய்ய முடியும். காரணம் குடல்கள் இயல்பான நிலையில் இருந்து மாறாமல் இருக்கும்.

நோயினால் உண்டாகும் மலச்சிக்கல்

இந்த வகையான மலச்சிக்கல் குடலில் உண்டான நோய் நிலைகளால் உண்டாவது ஆகும். இதனை உணவு மாற்றத்தின் மூலம் சரி செய்ய முடியாது. சாதாரண முறைகளாலும் இதனை சரிசெய்ய முடியாது. கண்டிப்பாக மருத்துவரின் உதவி தேவைப்படும்.

(குடலின் விறைப்பு அல்லது வலிப்பினால் உண்டான மலச்சிக்கல் என்றால் மலம் வறண்டு கடினமாக இருக்கும் எனவே குளிர்ந்த நீரையும், மற்ற திரவங்களை காலையில் அருந்த வேண்டாம். ஏனெனில் இவை குடலில் விறைப்புத்தன்மையை உண்டாக்கும்.

அதிகப்படியான பேதி மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. அடிக்கடி பேதி மருந்துகளை பயன்படுத்தும் போது உடலின் சுவர்கள் சோர்வடைந்து மருந்து இல்லாமல் மலத்தை வெளியேற்ற முடியாத நிலை உண்டாகும். எனவே நல்ல உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் பேதி மருந்துகள் இல்லாமல் மலம் கழிக்கலாம்.)

மலச்சிக்கல் வராமல் தடுக்கும் இரண்டு முக்கிய வழிமுறைகள்

மலச்சிக்கலுக்கு ஏற்ற நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்சத்துள்ள உணவுகள் குடலை தூய்மைப்படுத்தும். அவை செரிக்காது. ஆனால் மலத்தை வெளித்தள்ள உதவும். காய்கறிகள், பழங்கள், தீட்டப்படாத அரிசி, மீன், தயிர் போன்றவை மலச்சிக்கல் வராமல் தடுக்கும், தயிரில் உள்ள லாக்டோ பசிலஸ் மலச்சிக்கலை தடுப்பதில் பெரும்பங்கு ஆற்றுகிறது. ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிடவும். காலை உணவு சத்துள்ளதாகவும் சமச்சீரான உணவாகவும் இருத்தல் அவசியம் ஆகும்.

ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கோப்பை தயிர் குடித்தால் மலத்தை வெளித்தள்ள உதவும். ஆனால் காடி ஆபத்து உண்டாகும்.

நாள் ஒழுக்கம்

எழுந்தவுடன் காலைக் கடன் மலம் கழித்தல் அவசியம் . மலம் செல்லவில்லை என்றால் கண்டிப்பாக தினமும் காலையில் கழிவறை சென்று உட்கார்ந்து பழக்கப் படுத்திக்க கொள்ளவேண்டும்.

மலச்சிக்கலைப் போக்கும் சில வழிமுறைகள்

  • ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கோப்பை தயிர் குடித்தால் மலத்தை வெளித்தள்ள உதவும். ஆனால் காடி ஆபத்து உண்டாகும். அதனால் சிறிது கவனம் தேவை.
  • காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை குளிர்ந்த நீர் அல்லது பால் அருந்தவும். இதனால் பெருங்குடல் செயற்பட்டு மலம் செல்லும் உணர்வை தூண்டும். இது உடலின் தானியங்கு மண்டலத்தின் செயலாகும்.

மலச்சிக்கலைப் போக்கும் சில பயிற்சிகள்

  • வயிற்று தசைகளுக்கு பயிற்சி – மலச்சிக்கலினால் வயிற்றுத் தசைகள் மந்தமடைந்து இருக்கும். மலத்தை வெளித்தள்ள சிரமப்படும். இதனால் வயிற்று தசைகளுக்கு பயிற்சி அளித்தால் மலம் எளிதாக வெளியேறும்.
  • வயிற்று சுவாச பயிற்சியும் – மூக்கினால் காற்றை உள்ளிழுத்து வயிறு பெரிதாகும் வரை செய்யவும். வாயின் மூலம் மெதுவாக காற்றை வெளியில் விடவும். இந்த பயிற்சி செய்தால் வயிற்றுத் தசைகள் வலுவடையும்.
  • சலபாசனம் – குப்புறப் படுத்து இரண்டு கால்களையும் வெட்டுக்கிளி போலத் தூக்கவும்.
  • பவனமுக்தாசனம் – மல்லாக்கப் படுத்து தலையால் முட்டியைத் தொடவும்.
  • பச்சிமோத்தாசனம் – உட்கார்ந்தபடி கால்களை நீட்டி கைகளினால் கால் பெருவிரலைத் தொடவும்.