வேர்க்கடலை கொழுப்பு அல்ல. அது ஒரு மூலிகை!

VYM-Groundnut-Siddha.jpg

நிலக்கடலை குறித்த மூடநம்பிக்கைகளும், அவநம்பிக்கைகளும் இந்தியா முழுவதும் நிறைந்து உள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியை சுற்றி உள்ள பறவைகள், என எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவதை நாம் கவனித்து இருப்போம். வாருங்கள் நிலக்கடலையில் அருமை பெருமைகளை இந்த கட்டுரையில் வாசிக்கலாம்.

பாதாம் பிஸ்தாவை விட சிறந்தது நிலக்கடலை

நாம் பாதாம், பிஸ்தா, முந்திரி இவற்றில் தான் அதிக சத்து உள்ளது என்று கருதுகிறோம். அப்படி இல்லை. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்கு உண்டு.

நிலக்கடலையில் உள்ள சில மருத்துவ குணங்கள்

மகப்பேறுக்கு உதவும் நிலக்கடலை

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன், கர்பப்பைக் கட்டிகள் ஏற்படாமால் தடுக்கும் ஆற்றல் நிலக்கடலைக்கு உண்டு. அது மட்டுமல்லாது குழந்தைப் பேறை தர வல்லது நிலக்கடலை. தினமும் பெண்கள் நிலக்கடலையை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கருத்தரிப்பதற்கு முன்பே நிலைக்கடலையை எடுத்துக் கொள்வது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

கருப்பை கோளாறுக்கு உதவும் நிலக்கடலை

பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதை நிலக்கடலை தடுக்கிறது. பெண்களுக்குப் பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், ப்ளூடானிக் அமிலம், போன்றவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதை நிலக்கடலை தடுக்கிறது.

நீரிழிவு நோயை தடுக்கும் நிலக்கடலை

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து, மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகளில் நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப்பை கல்லைக் கரைக்கும் நிலக்கடலை

தினம் 30 நிலக்கடலை சாப்பிட்டுவந்தால் பித்தப்பை பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும் நிலக்கடலை

நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். இதில் உண்மை இல்லவே இல்லை. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். இதய வால்வுகளை பாதுகாக்கும் நுண்ம பொருட்கள் நிலக்கடலையில் உள்ளன. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. நிலக்கடலையில் பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது நோய் வருவதை தடுப்பதுடன், நமது இளமையைப் பராமரிக்க பெரிதும் உதவுகிறது.

ஞாபக சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை

நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் B3 (நியாசின்) உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. இரத்த ஓட்டத்தை பெரிதும் சீராக்கிறது.

மன அழுத்தம் போக்கும் நிலக்கடலை

நிலக்கடலையில் முக்கியமான சில அமினோ அமிலங்கள் உள்ளன. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் பொருள் உற்பத்திக்கும் பயன்படுகிறது. மூளை நரம்புகளை இந்த செரட்டோனின் தூண்டி மன அழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வர மன அழுத்தத்தில் இருந்து ஓரளவு விடுபடலாம்.

நிலக்கடலை கொழுப்பை குறைக்கும்

தலைப்பை படிப்பவர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தலாம். நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு அதிகமாகும் என்று நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் அதிகம் உள்ளது. இதில் தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் மோனோ-அன்-சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலி-அன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது. இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.