சிமிலி உருண்டை நினைவில் இருக்கிறதா?

VYM-Simili-Urundai-1200x630.jpg

நமது பாரம்பரிய உணவான சிமிலி உருண்டை நமக்கு அனேகமாக மறந்து போயிருக்கும் இந்த உணவை சமைப்பது எப்படி என்று இங்கே காணலாம்.

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு – கால் கிலோ
வெல்லம் – கால் கிலோ
வறுத்த வேர்க்கடலை – கால் கிலோ
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

சிமிலி உருண்டை செய்முறை

1) கேழ்வரகு மாவுடன் சிறிது உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கையால் தட்ட கூடிய அளவுக்கு பிசைந்து கொள்ளவும். கிட்டத்தட்ட சப்பாத்தி மாவு போலவே ஆனால் அதைவிட கொஞ்சம் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்தக் கலவையை 10 நிமிடங்கள் வரை ஊற விடவும்.

2) வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு சிறிது கரகரப்பாக உள்ளபடி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

3) உருண்டை வெல்லத்தை நன்கு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

4) இப்போது கேழ்வரகு மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

5) தோசைக்கல்லை நன்றாக சூடேற்றி அதில் ஒவ்வொரு உருண்டையையும் நேரிடையாக தட்டவும். இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு அதை போல் போட்டு எடுக்கவும்.

6) சூடான கேழ்வரகு அடை களை ஒரு தட்டில் போட்டு அதில் பொடித்த வேர்க்கடலை வெல்லத்தைப் போட்டு நன்றாக கையால் பிசையவும். இதனை உருண்டை பதத்திற்கு கொண்டுவந்து உருட்டி எடுக்கவும்.

7) இதே போல ஒவ்வொரு கேழ்வரகு உருண்டையும் அடையாக தட்டி சிமிலி உருண்டையாக செய்து எடுத்து பரிமாறவும்.

கேழ்வரகில் உள்ள நன்மைகள்

கேழ்வரகில் உடல் எலும்புகளுக்கான சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது இத்துடன் வெல்லத்தில் இரும்புச்சத்து நிலக்கடலையின் புரதம் போன்றவை சேர்வதால் எல்லோருக்கும் ஏற்ற சத்தான உணவுவகை என்பதால் இதனை எந்த வயதினரும் எந்த காலத்திலும் உண்ணலாம்.

velayudam white logo

சித்த மருத்துவ முறை உடல் நலனை பேணுதல் என்பதையே முதன்மை கூறாகக் கொண்டு இயங்கும் ஒரு முழுமையான மருத்துவ முறை ஆகும். தமிழ் பேசும் நிலமான நாவலந் தீபகற்பத்தில் (இந்திய) பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி நெறிப்படுத்தப்பட்ட ஒரு மருத்துவ முறை ஆகும். தமிழ் மருத்துவம், சிந்தாமணி மருத்துவம், அறிவன் மருத்துவம் என்று பல பெயர்களில் சித்த மருத்துவத்தை விளிப்பதுண்டு.

முகவரிகள்

எண். 9, GST சாலை, தாம்பரம் சானடோரியம்
சென்னை – 600 047
(ஆந்திரா மெஸ் அருகில்)
____________________________________________

C-47, 2வது அவென்யூ, கடை எண். 37
அண்ணா நகர் பிளாசா, அண்ணா நகர்
சென்னை – 600 040
(ஐயப்பன் கோவில் அருகில்)