தமிழ் மருத்துவக் கழகம்

அரசு சாரா அமைப்பு

தமிழ் மருத்துவக் கழகம்


தமிழ் மருத்துவக் கழகம் எனும் அரசு சாரா அமைப்பை மருத்துவர் வேலாயுதம் நிறுவி அதன் தலைமை அறங்காவலராக இருந்து வருகிறார். சித்த மருத்துவ முறையை பரவலாக்கி, அதன் விழுமியங்களை உலகறியச் செய்வதே இந்த அமைப்பின் முக்கியப் பணியாகும். தமிழர்களின் பாரம்பரியமான இந்த மருத்துவ முறையை பேணிப் பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் இதன் சிறப்பை எடுத்துச் சென்று, உயிர்ப்புடன் வைத்திருப்பதே தமிழ் மருத்துவக் கழகத்தின் முதன்மை குறிக்கோள் ஆகும்.

தமிழ் மருத்துவக் கழகத்தின் உன்னத நோக்கங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன;

(1)    சித்த மருத்துவ வகுப்புகள்

சித்த மருத்துவர்கள், சித்த மருத்துவ ஆசிரியர்கள் போன்றவர்களைக் கொண்டு சித்த மருத்துவ வகுப்புகளை எடுத்து சித்த மருத்துவத்தை படிக்கும் மாணாக்கர்களுக்கு மருத்துவம் பற்றிய பொதுவான  அறிவையும், நுட்பமான அறிவையும் புகட்டுதல்.

(2)    சித்த  மருத்துவம் தொடர்பான சந்திப்புகள்

சித்த மருத்துவர்கள், சித்த மருத்துவ ஆசிரியர்கள், சித்த மருத்துவ மாணவர்கள் போன்றவர்களைக் கொண்டு பரவலான சந்திப்புகளை ஏற்பாடு செய்து, புதிய கருத்துகளையும், சிந்தனைகளையும் பரிமாறிக்கொள்ளும் ஒரு களமாக அச்சந்திப்புகளை நிறுவி அனைவரின் முன்னேற்றத்திற்கும் மகிழ்வுடன் செயல்படுதல்.

(3)    சித்த  மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம்கள்

சாலையோர பொதுக்கூட்டங்கள், மருத்துவ முகாம்கள் போன்றவற்றின் மூலமாக சித்த மருத்துவத்தின் பெருமைகளையும், சிறப்புகளையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தல்.

(4)    சித்த  மருத்துவ மூலிகை கண்காட்சிகள்

மூலிகை கண்காட்சிகள் மற்றும் பிற முகாம்களை ஏற்பாடு செய்து அதன் மூலம் மக்களுக்கு

  •    நல்ல உணவுப்பழக்க வழக்கங்கள்
  •    பாரம்பரிய முறைகளை கடைபிடித்தல்

போன்றவற்றை திரும்ப கொண்டு வர ஆவன செய்தல்.

(5)    சித்த  மருத்துவத்தின் பெருமைகளை உலகிற்கு அறிவிக்கும் செயல்பாடுகள்

நமது பாரம்பரியமான சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளை உலகிற்கு எடுத்துரைத்து அதன் மூலம் மக்கள் எல்லோரும் இன்புற்று வாழ வழிசெய்தல்.

(6)    சித்த  மருத்துவத்தையும், தற்கால மருத்துவத்தையும் ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள்

சித்த  மருத்துவத்தின் கூறுகளை உள்வாங்கிக்கொண்டு அதன் அடிப்படையில் இருந்து சற்றும் விலகாமல் தற்கால மருத்துவ ஆய்வு முறைகளையும், நவீன கருவிகளையும் பயன்படுத்தி,

  •    சித்த  மருத்துவத்தையும், தற்கால மருத்துவத்தையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபடுதல்.
  •    சித்த  மருத்துவ முறைக்கு உலக அங்கீகாரம் கிடைக்க பாடுபடுதல்.

(7)    சித்த  மருத்துவப் பல்கலைக்கழகம்

சித்த மருத்துவத்தின் பண்புகளை உணர்ந்து, அதிநவீன ஆய்வுக்கூடங்களையும், மருந்துசெய் கூடங்களையும் உள்ளடக்கிய சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் நிறுவ பாடுபடுதல்.

(8)    சித்த  மருத்துவ மூலிகைக் காடுகளும், வளங்களும்

(a)    இனங்காணும் முயற்சிகள்

  •    சித்த மருத்துவ மூலிகைகள் விளையும் காடுகள்,
  •    அழியும் நிலையில் இருக்கும் சித்த மருத்துவ இலக்கியங்களை தாங்கி இருக்கும் பழைய          ஓலைச்சுவடிகள், மற்ற  செல்வங்கள் போன்றவற்றை இனங்கண்டு

(b)   அவற்றின் மேல் உரிமை செலுத்த சட்டபூர்வமான முயற்சிகளை எடுத்தல்.

(c)    அவைகளை தகுந்த வழிகளில் பாதுகாக்க முயற்சிகளை எடுத்தல்.

(9)    ஆய்வுத் திட்டங்களுக்குத் தேவையான பொருளுதவிகள் வாங்குவது

(a)    அரசாங்கமும், தனியார் நிறுவங்களும் பெருமளவில் ஆதரவளித்து இயக்கி நடத்தும் ஆய்வுத் திட்டங்களில் ஆவலுடன் பங்கு பெறுதல்

(b)   அம்மாதிரியான ஆய்வுத் திட்டங்களில் முழுமையாக அமைப்பை ஈடுபடுத்தி சித்த மருத்துவ முறையை  ஊக்குவித்தல்.

சித்த மருத்துவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல நீங்களும்

தமிழ் மருத்துவக் கழகத்தோடு கைகோர்க்கலாம்!


கொடையளிக்க வேண்டிய கணக்கு எண்

“Tamizh Maruthuva Kazhagam“
Account Num – 10181258801
State Bank of India
IFSC Code – SBIN0002196

*Claim Tax Exemption under 80G
** Donations are accepted under Noble Health Services