மருத்துவர் வேலாயுதம்

வகித்த பதவிகள்


மருத்துவர் வேலாயுதம் தனது பட்டப்படிப்புகளை முடித்த பிறகு உடனே மருத்துவப் பணிகளை பார்க்கத் தொடங்கிவிட்டார். 2002-ம் ஆண்டு, சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவ ஆசிரியர் பணியில் சேர்ந்து கற்பிக்கத் தொடங்கினார். சித்த மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற அவரது கனவு கனியும்போது ஆசிரியர் பணியில் இருந்து தன்னை தற்காலிகமாக விடுவித்துக் கொண்டார்.

2007-ம் ஆண்டு தனது பட்ட மேற்படிப்பை முடித்த கையோடு, தாம்பரத்தில் இயங்கும் தேசிய  சித்த மருத்துவ நிறுவனத்தில் (National Institute of Siddha) மருத்துவ அலுவலராக பணியில் சேர்ந்தார். அந்நிறுவனத்திலேயே நோய் மதிப்பீட்டு ஆசியராக (Clinical Teacher) உயர்வு பெற்ற மருத்துவர் வேலாயுதம் அதன் பிறகு துணை மருத்துவக் கண்காணிப்பாளராக பதவி வகித்தார். 2011-ம் ஆண்டு வரை அவர் அந்த பதவியில் நீடித்தார்.

அதன் பிறகு 2012ம் ஆண்டு, சேலம் சிவராஜ் சித்த வைத்தியக் கல்லூரியில் இணைப் பேராசிரியராக பணிக்கு சேர்ந்தார்.

மேலும் அவர் 2015ம் ஆண்டு வரை இம்ப்காப்ஸ் (IMPCOPS) என்ற புகழ் பெற்ற நிறுவனத்தில் துணைத் தலைவராக பணியில் இருந்தார். அவர் பணியாற்றிய பல்வேறு நிறுவனங்களும், அங்கே அவர் பெற்ற அனுபவங்களும் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.


மேலும் அறிய

மருத்துவர் வேலாயுதம் வகித்த பதவிகள்

  • ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை
  • தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தாம்பரம், இந்திய அரசு
  • சிவராஜ் சித்த வைத்தியக் கல்லூரி, சேலம்
  • இம்ப்காப்ஸ் (IMPCOPS Ltd)
ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை

பதவி – விரிவுரையாளர்

தொழில் – ஆசிரியர்

தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தாம்பரம், இந்திய அரசு

பதவி – மூத்த மருத்துவ அலுவலர், நோய் மதிப்பீட்டு ஆசிரியர்  &

துணை மருத்துவக் கண்காணிப்பாளர்

தொழில் – ஆசிரியர்

சிவராஜ் சித்த வைத்தியக் கல்லூரி, சேலம்

பதவி – இணைப் பேராசிரியர்

தொழில் – ஆசிரியர்

இம்ப்காப்ஸ் (IMPCOPS Ltd)

பதவி – துணைத் தலைவர்

தொழில் – AYUSH மருந்துகளின் நிருவாகமும்  உற்பத்தியும்