குன்மம்

மருத்துவ விளக்கம்

குன்மம்


வயிற்றுப்புண் என்று சாதாரணமாக சொல்லப்படும் குன்மம் வயிற்றிலோ, சிறுகுடலின் முற்பகுதியிலோ அதன் உள்ளுக்கு ஏற்படும் புண்ணை குறிக்கிறது. வயிற்றிலும், சிறுகுடலின் முற்பகுதியிலும் அதன் உள்ளில் மெல்லிய ஒரு திசுப்படலம் இருக்கும். அதில் தான் இந்த புண் ஏற்படுகிறது.

சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை வாதத்தில் குறைபாடு ஏற்பட்டால் குன்மம் ஏற்படுகிறது. குன்மத்தில் எட்டு வகைகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. அவை வலி குன்மம், அழல் குன்மம், இய குன்மம், முக்குற்ற குன்மம், வாயு குன்மம், எரி குன்மம், சக்தி குன்மம், வளி குன்மம் ஆகியன ஆகும்.

குன்மம் ஏற்படுவதற்கான காரணங்கள்

  • ஒரு வகை பாக்டீரியாவினால் குன்மம் ஏற்படுகிறது என்று சொல்லுவார்கள். இந்த வகை பாக்டீரியா எல்லோருக்குமே வயிற்றில் இருக்கும் என்றாலும் இந்த பாக்டீரியா ஏன் திடீரென்று வயிற்றின் உள் பகுதி திசுப் படலத்தை புண்ணாக்கி குன்மத்தை ஏற்படுத்தவேண்டும். புகை பிடிப்பது, மது அருந்துவது, சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாதது, சரியான நேரத்திற்கு தூங்காதது, மன அழுத்தம், சில வகை உணவுகள், போன்ற காரணங்கள் தான் குன்மத்தை வரவழைக்கின்றன என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.
  • சில வகை மருந்துகளை வழக்கமாக எடுப்பதாலும் குன்மம் ஏற்படலாம்.
  • சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை புளிப்பு சுவை, நார்ச்சத்து இல்லாத கிழங்கு வகைகள் போன்ற உணவுகள் குன்மம் வரவழைப்பதில் பெரும் பங்கு வகிப்பதாகச் சொல்லுகிறது.

எட்டு வகையான குன்மத்திற்கும் குறிப்பிட்ட அறிகுறிகள்


வலி குன்மம்

– வயிற்று வலி
– உடல் எடை குறைவது
– நடக்க முடியாமல் அவதிப்படுவது
– மலச்சிக்கல்
– வாய் உலர்ந்து போவது
– தலைவலியும், மயக்கமாக உணர்வது
– ரத்த வாந்தி எடுப்பது.


அழல் குன்மம்

– தலை சுற்றல்
– உடல் எடை குறைவது
– அடர் நிறத்தில் சிறுநீர் கழித்தல்
– மலச்சிக்கல்
– மஞ்சளாக காட்சியளிக்கும் முகம்


இய குன்மம்

– நெஞ்செரிச்சல்
– உடல் நடுக்கம்
– உணவை கண்டால் வெறுப்பு ஏற்படுவது
– தோல் வெளிர் நிறமாக மாறுவது.


முக்குற்ற குன்மம்

– வயிறு நிறைந்த ஒரு உணர்வு
– நெஞ்செரிச்சல்
– வாயில் உவர்ப்பாய் உணருவது


வாயு குன்மம்

– வயிறு பிடிப்பதால் ஏற்படும் வயிற்றுவலி
– அஜீரணம்
– உடல் எடை குறைவது
– நடக்க முடியாமல் அவதிப்படுவது
– வயிறு நிறைந்த ஒரு உணர்வு
– அதிகமாக வியர்ப்பது


எரி குன்மம்

– நெஞ்செரிச்சல்
– மோசமான வயிற்று வலி
– வயிறு நிறைந்த ஒரு உணர்வு
– உடல் எடை குறைவது
– அதிகமாக வியர்ப்பது


சக்தி குன்மம்

– வாந்தியுடன் கூடிய வயிற்று வலி
– தலை சுற்றல்
– மலச்சிக்கல்
– குமட்டும் உணர்வு
– நாவில் சுவை உணர முடியாது போவது


வளி குன்மம்

– வயிறு நிறைந்த ஒரு உணர்வு
– தூக்கமின்மை
– பசி எடுக்காமல் இருப்பது
– உடல் வலி


குன்மம் இருந்தால் ஏற்படும் வழக்கமான அறிகுறிகள்

பெரும்பான்மையாக சொல்லிக்கொள்ளும்படியான அறிகுறிகளை ஆரம்பக் கட்டத்தில் குன்ம நோய் ஏற்படுத்துவதில்லை. ஆனாலும் கீழ்கண்ட சில அறிகுறிகளை அது சிலருக்கு ஏற்படுத்தலாம்.

  • வயிற்றுக்குள் எரிவது போன்ற ஒரு வலி.
  • கொழுப்பு நிறைந்த உணவை உட்கொண்டவுடன் இந்த வயிற்றுவலி அதிகரிக்கும்
  • நெஞ்செரிச்சல்
  • வயிறு நிறைவாக இருக்கும்படியான ஒரு உணர்வ.
  • குமட்டல்

குன்மத்தால் அதிகரித்தால் ஏற்படும் அறிகுறிகள்

  • ரத்த வாந்தி எடுத்தல்
  • கருமையாக மலம் கழித்தல்
  • திடீர் உடல் எடை குறைவு
  • வாந்தியும், குமட்டலும்
  • பசி எடுக்கும் உணர்வில் மாற்றம் ஏற்படுதல்

சித்த மருத்துவத்தில் குன்ம நோயறிதல்

மூன்று குற்றங்களும் பிறழ்ந்து போதல் – குறிப்பிடப்பட்ட அறிகுறிகளுடன் நாடி பிடித்தும் பார்த்து சித்த மருத்துவர் குன்மம் இருக்கிறதா என்று பார்ப்பார். குன்மம் இருந்தால் வாத நாடி அதிகப்படியாக இருக்கும்.


சித்த மருத்துவத்தில் குன்ம நோய்க்கான மருத்துவம்

மாதுளை மணப்பாகு (pomegranate syrup), கடுக்காய், வில்வம், சீரகம், இந்துப்பு போன்ற மருந்துப் பொருட்கள் குன்மத்திற்கு உள்ள சில மருந்துகள் ஆகும்.


அனுபவமிக்க சித்த மருத்துவர்

மருத்துவர் வேலாயுதம் பற்றிய சிறு குறிப்பு


0123456789001234567890

ஆண்டு கால

அனுபவம் சித்த மருத்துவத்தில் உண்டு. நோயறிதலிலும், நோய் தீர்ப்பதிலும் பல்லாண்டு அனுபவமுள்ள தேர்ந்த சித்த மருத்துவர்.



012345678900123456789001234567890

கட்டுரைகள்

பல்வேறு தமிழ் நாளிதழ்களிலும், வார மாத இதழ்களிலும் எழுதிய அனுபவம் உண்டு. பல தமிழ் தொலைக்காட்சிகளில் தோன்றி நோய் கட்டுப்பாடுகள் குறித்துப் பேசி பிரபலமானவர்.



01234567890012345678900123456789001234567890

நோயர்கள் வரை

குணப்படுத்திய அனுபவம். சித்த இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வமும், திறனும், சித்த மருத்துவம் பார்க்கும் அனுபவம், இவை இரண்டும் கலந்த கலவையாக மருத்துவர் வேலாயுதம் இருக்கிறார்.