மூலம்

மருத்துவ விளக்கம்

மூலம்


ரத்த நாளங்கள் ஆசனவாய் பகுதியில் பல்கிப் பெருகும்போது ஏற்படும் நிலையே மூலம் எனப்படுகிறது. இப்படி புடைத்த நாளங்கள் ஆசனவாயின் உள்ளே இருந்தால் அது உள்மூலம் என்றும், அதுவே வெளியே இருந்து தயங்கிக் கொண்டு இருந்தால் வெளிமூலம் என்றும் கூறப்படுகிறது.

சில சமயங்களில் வெளிமூலக்கட்டிகளில் ரத்தம் கட்டிக்கொள்ளலாம். அப்படி ஆகும் போது அவை கடினமான உருண்டைகளாக புடைத்து ஆசனவாயின் வாயிலில் வீங்கி கடுமையான வலியை ஏற்படுத்தலாம். புடைத்த  மல கழிப்பதை மிகவும் சிரமம் ஆக்குகிறது.

மூலத்தின் அறிகுறிகள்

  • மலம் கழிக்கும்போது ரத்தக் கசிவு இருக்கும். ரத்தம் துளி துளியாய் மலத்தின் மேல் காணப்படும். ரத்தம் வரும்போது அனேக நேரங்களில் வலிப்பது இல்லை.
  • ரத்தக்கசிவு ஏற்படும்போது சில சமயங்களில் வலி இருக்கலாம். வலி குறைவாகவோ, நிறைந்தோ காணப்படும்
  • ஆசனவாயின் வாயிலில் நமச்சல் இருக்கும்.
  • வெளிமூலமாக இருக்கும்பச்சத்தில் புடைத்துக் காணப்படும்.
  • மூலக்கட்டியில் ரத்தம் உறைந்து இருந்தால் மிக மோசமான வலியை ஏற்படுத்தும். அது மட்டுமில்லாமல் மல கழிக்கவும் சிரமத்தை ஏற்படுத்தும்.

மூலத்தின் காரணங்கள்

  • மூலம் ஏற்பட முழுமுதல் காரணம் மலச்சிக்கலே ஆகும். நாள்பட்ட மலச்சிக்கல் பல ஆண்டுகளாக நீடுக்கும்போது மூலத்தை ஏற்படுத்தலாம்.
  • மலம் கழிக்கும்போது அதிகமாக முக்கி முக்கிப் போவது கூட மூலத்தை ஏற்படுத்தலாம்.
  • மேற்கத்திய கழிவறையை அதிகமாக பயன்படுத்தினால் மூலம் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
  • கழிவறையில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தாலும் மூலம் வருவதற்கு வாய்ப்பு இருந்க்கிறது.
  • உடல் பருமன் கூட மூலம் வர காரணம் ஆகும்.
  • மோசமான உணவுப் பழக்கவழக்கம் – அதிக மாவுச்சத்துள்ள, நார்ச்சத்து குறைந்த மாவுப்பொருட்கள் மூலம் மலச்சிக்கலை அதிகம் ஏற்படுத்துகின்றன.

சித்த மருத்துவத்தில் மூல நோயறிதல்

• ஆசனவாய்ப் பகுதியை சோதித்துப் பார்த்தல்.
• பிராக்டோஸ்கோப் என்ற சிறிய கருவியை கொண்டு மூலத்தின் தன்மையை சோதித்துப் பார்த்தல்.
• நோயர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை அவர்கள் வாயால் கேட்டு மூலத்தின் தன்மையை ஓரளவு கணித்தல்.
• மூன்று தத்துவங்களில் பித்தம் (அழல்) பிறழ்ந்து காணப்படுதல்.


சித்த மருத்துவத்தில் மூல நோய்க்கான மருத்துவம்

• மோசமான தற்கால வாழ்வுமுறையின் தீமைகளை நோயர்களுக்கு எடுத்துச்சொல்லி அது குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்துதல்.
• வாரம் ஒரு முறை கண்டிப்பாக எண்ணெய் குளியல் எடுக்கப் பழக்கப்படுத்துவது.
• பச்சை மிளகாய் கொண்டு சமைப்பதை நிறுத்தி அதற்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்துவது.
• பல மணிகள் உட்கார்ந்துக் கொண்டே இருக்காமல் அமர்வதற்கு சிறிது இடைவெளி விட்டு, சிறிதாக நடை நடக்க
வலியுறுத்துதல்.
• மூலிகை மருத்துவம் – வாழைத்தண்டு, வாழைப்பூ, கருணை கிழங்கு, பிரண்டை, கடுக்காய், துத்தி போன்ற
மூலிகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுதல்.
• கற்றாழை, படிகாரம் ஆகிய இயற்கை மருந்துகளை வைத்து ஆசனவாய் பகுதியை கழுவிக் கொண்டு வருதல்.
• பேதியுப்பு எனப்படும் எப்சம் உப்பை வெந்நீரில் கலந்து, அதனை குவளை போன்ற அமைப்பில் ஊற்றி அதன் உள்ளே
ஆசனவாய் படும்படி அமர்ந்து இருத்தல்.


அனுபவமிக்க சித்த மருத்துவர்

மருத்துவர் வேலாயுதம் பற்றிய சிறு குறிப்பு


0123456789001234567890

ஆண்டு கால

அனுபவம் சித்த மருத்துவத்தில் உண்டு. நோயறிதலிலும், நோய் தீர்ப்பதிலும் பல்லாண்டு அனுபவமுள்ள தேர்ந்த சித்த மருத்துவர்.



012345678900123456789001234567890

கட்டுரைகள்

பல்வேறு தமிழ் நாளிதழ்களிலும், வார மாத இதழ்களிலும் எழுதிய அனுபவம் உண்டு. பல தமிழ் தொலைக்காட்சிகளில் தோன்றி நோய் கட்டுப்பாடுகள் குறித்துப் பேசி பிரபலமானவர்.



01234567890012345678900123456789001234567890

நோயர்கள் வரை

குணப்படுத்திய அனுபவம். சித்த இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வமும், திறனும், சித்த மருத்துவம் பார்க்கும் அனுபவம், இவை இரண்டும் கலந்த கலவையாக மருத்துவர் வேலாயுதம் இருக்கிறார்.