நெருங்கும் வெயில்காலம்! நீரின் மகத்துவம்!!

VYM-Water-Importance.jpg

கோடை காலத்தில் உடல் வெப்பநிலை அதிகமாகி அதனால் உண்டாகும் வெப்ப அதிகரிப்பை குறைக்க நாம் தண்ணீர் அருந்துவோம். இல்லையென்றால் குளிர்ச்சியான நீரை மேலுக்கு உடலில் கொட்டி வெப்ப இழப்பை சரி செய்வோம். ஏதாவது ஒரு வழியில் உடல் வெப்பநிலையைக் குறைக்க முயற்சிப்போம். நெருங்கி வரும் கோடை காலத்தை எதிர்கொள்ள நாம் நிறைய நீர் அருந்துவோம். இதனால் உடல் எப்படி பாதுகாக்கப்பட்டு இயங்குகிறது என்று பார்ப்போம்.

கோடைக்காலத்தில் உடலில் கை, கால் போன்ற உடலின் தோல் பரப்பு அதிகமாகி காணப்படும். நம் உடல் வியர்க்கும் போது தோலிலுள்ள வியர்வைகள் மூலம் நீர் வெளியாகி வெப்பத்தை குறைத்து உடல் குளிர்ச்சியடையும். உடலில் வியர்க்கும் போது வெளிப்படும் வெப்ப அளவு 585 கலோரி/கிராம் ஆகும். எனவே வியர்த்தல் செய்கை உடலின் வெப்பத்தை வெளியேற்ற உதவுகிறது.

கோடை காலத்தில் எப்படி உங்கள் உடல் வெப்பத்தை குறைக்க நீர் உதவுகிறது?

கோடை காலத்தில் அதிகப்படியாக வியர்ப்பது இதனால் தான். நிறைய வியர்வை சிந்தினால் உங்கள் உடலில் உள்ள நீர் வற்றிவிடும். இதனால் உடல் இயல்பாக உங்களுக்கு தாக உணர்வை, சமிஞையை ஏற்படுத்தி தண்ணீர் அருந்தும்படி பணிக்கிறது. எனவே வெய்யில் காலத்தில் ஏற்படும் தாகத்தை உடனே தணிக்க ஆவண செய்யுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் வேலைப்பளு காரணமாக தாகம் தனிப்பாதை தள்ளிப் போடவேண்டாம். நீங்கள் வெளியே பயணிக்கும் வேலையில் இருந்தால் உங்கள் கையோடு நீர்குவளைகளை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்.

குளிர் காலத்தில் எப்படி உங்கள் உடல் வெப்பத்தை சீராக வைக்க தண்ணீர் உதவுகிறது?

குளிர்காலத்தில் உண்டாகும் அதிகப்படியான குளிரால் உடலில் இருந்து வெப்பம் வெளியேறுவதை தடுக்க வேண்டும். குளிர் காலத்தில் பொதுவாக உடல்நடுக்கம் ஏற்படும். உடலின் தோல் பரப்பு குறைந்து, உடலில் இருந்து நீர் ஆவியாவதை தடுத்து வெப்பத்தை உடலுக்கு கொடுக்கும். குளிர்காலத்தில் வியர்வை கோலங்கள் தோலில் நெருக்கமாக இருப்பதால் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதைத் தடுக்கும்.

தண்ணீரானது பனிக்கட்டியாக மாறி, தோலின் பரப்பில் உள்ள வியர்வை துளைகளை மூடி உடல் வெப்பத்தை வெளியேறுவதை தடுத்து உடல் வெப்பநிலையை வெளியேற்றாமல் கட்டுப்படுத்துகிறது இந்த தண்ணீர் உறைந்து பணியாக மாற 80 கலோரி வெப்பம் தேவைப்படுகிறது.

பல்வேறு காலநிலைக்கு ஏற்ப உடல் வெப்பநிலையை ஒரே அளவாக வைத்திருப்பதில் உடலிலுள்ள தண்ணீர்தான் அடிப்படையான காரணம். உடல் வெப்பநிலை சமநிலை ஒழுங்குபடுத்துவதின் மூலம் உடல் நலத்தினை உடலில் உள்ள தண்ணீரே பராமரிக்கிறது.