கீல் வாய்வு

மருத்துவ விளக்கம்

கீல் வாய்வு


பொதுவாக உடலில் உள்ள மூட்டுகளில் ஏற்படும் வலி அல்லது இறுக்கம் இவற்றை பொதுவாக கீல் வாய்வு என்று சொல்லலாம். கீல் வாய்வில் பல வகைகள் இருந்தாலும், அழல் கீல் வாய்வு என்று சொல்லப்படும் Osteoarthritis-ம், வளி அழல் கீல் வாய்வு என்று சொல்லப்படும் Rheumatoid Arthritis-ம் தான் பொதுவாக தாக்குகின்றது. இந்த இரண்டு வகைகளில் அதிகமாக ஏற்படும் கீல் வாய்வு வகை அழல் கீல் வாய்வு ஆகும்.

அழல் கீல் வாய்வு (Osteoarthritis)

மூப்படையும்போது பொதுவாகவே நமது உடலில் உள்ள மூட்டுகள் தேயத் தொடங்குகின்றன. இப்படி ஆகும்போது அழல் கீல் வாய்வு ஏற்படுகிறது. இடுப்பு, கால் மூட்டு, கை மூட்டு, முதுகுத்தண்டு போன்ற இடங்களில் உள்ள மூட்டுகளில் அழல் கீல் வாய்வு ஏற்படலாம். இந்த நோய் தாக்கும்போது உடலில் உள்ள மூட்டுகளில் உள்காயங்கள் ஏற்பட்டாலும் அவை நோயர்களை படுத்த படுக்கை ஆக்குவதில்லை.

அழல் கீல் வாய்வின் அறிகுறிகள்

  • நோயுற்ற மூட்டுகளில் வலி
  • நடக்கும்போது ஏற்படும் வலி
  • காலையில் தூங்கி எழுந்தவுடன் ஏற்படும் ஒரு வித உடல் இறுக்கம். சிலருக்கு ஒய்வு எடுத்து மீளும்போதும் இந்த உடல் இறுக்கம் ஏற்படுகிறது.

வளி அழல் கீல் வாய்வு (Rheumatoid Arthritis)

உடலில் உள்ள நோய் எதிர்க்கும் ஆற்றலே நம்முடைய மூட்டுகளை தாக்கத் தொடங்கி அதனால் அழற்சி ஏற்பட்டால் அதனை வளி அழல் கீல் வாய்வு என்று சொல்வார்கள்.

வளி அழல் கீல் வாய்வின் அறிகுறிகள்

  • மூட்டுகளில் வலி, இறுக்கம், அழற்சி ஆகியவை காணப்படும். பொதுவாக வளி அழல் கீல் வாய்வு நம் உடலில் உள்ள சிறிய மூட்டுகலையே அதிகம் பாதிக்கறது.
  • நடக்கும்போது வலி.
  • காலையில் தூங்கி எழுந்தவுடன் ஏற்படும் ஒரு வித உடல் இறுக்கம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கலாம். இதுவே மிகுந்த சோர்வை கொடுக்கலாம்.
  • சிலருக்கு இதனால் உடல் எடை குறைவு கூட நிகழலாம்.

சித்த மருத்துவத்தில் கீல் வாய்வு நோயறிதல்

• உடலில் ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளைக் கண்டபின்னர் நோயர்களுடன் மேலும் பேசி அவர்களுக்கு இருக்கும் உடல்
உபாதைகளை அறிந்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு சித்த மருத்துவர் என்ன வகையான கீல் வாய்வு ஏற்பட்டு
இருக்கிறது என்று அறிய முற்படுவார்.
• பிறகு மூட்டுகளின் இயக்கத்தை பரிசோதனை செய்து பார்ப்பார்.
• சித்த மருத்துவர் நாடி பிடித்துப் பார்க்கும்போது வாத நாடி இயல்புக்கு மாறாக உயர்நிலையில் இருக்கிறதா என்று
கணிப்பார்.
• நெய்குறி முறையில் சிறுநீரில் விடப்பட்ட நல்லெண்ணெய்த்துளி பாம்பு போன்ற வடிவத்தில் பரவினால் வாதம்
பிறழ்ந்து உள்ளது என்று பொருள்.
• தற்கால மருத்துவத்தில் உள்ள ஸ்கான் அறிக்கைகளில் எந்த வகையான கீல் வாய்வு ஏற்பட்டு இருக்கிறது என்று
கணிக்க முடியும். இந்த அறிக்கைகளைக் கொண்டு எந்த அளவிற்கு கீல் வாய்வு பாதிப்பு மூட்டுகளுக்கும்
மச்சைகளுக்கும் ஏற்பட்டு உள்ளது என்றும் கணிக்க முடியும்.
• Rheumatoid Factor (RH) என்று சொல்லக்கூடிய ஒரு வகை புரதம் ரத்தத்தில் இருந்தால் வளி அழல் கீல் வாய்வு இருக்கிறது
என்று பொருள். அதனால் Rheumatoid Factor ரத்த பரிசோதனை அறிக்கைகளையும் சித்த மருத்துவர் கேட்க
விழையலாம்.


சித்த மருத்துவத்தில் கீல் வாய்வுக்கான மருத்துவம்

• வாதத்திற்கு எதிராக செயல்படும் மூலிகைகளான அசுவகந்தா, பிரண்டை, சேராங்கொட்டை போன்றவற்றால்
செய்யப்பட களிம்புகளை பாதிக்கப்பட்ட மூட்டுகளின் மேல் தடவி வர சித்த மருத்துவர் பரிந்துரைப்பார்.
• புளிப்பு சுவையை அளிக்கும் உணவுகளான, புளி, தக்காளி, போன்றவைகளையும், கிழங்கு வகை காய்கறிகளான
உருளை, கருணை, காரட் போன்றவைகளையும் தவிர்க்குமாறு சித்த மருத்துவர் பரிந்துரைப்பார்.
• பூண்டு, பெருங்காயம் போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளும்படி மருத்துவர் பரிந்துரைப்பார்.



அனுபவமிக்க சித்த மருத்துவர்

மருத்துவர் வேலாயுதம் பற்றிய சிறு குறிப்பு


0123456789001234567890

ஆண்டு கால

அனுபவம் சித்த மருத்துவத்தில் உண்டு. நோயறிதலிலும், நோய் தீர்ப்பதிலும் பல்லாண்டு அனுபவமுள்ள தேர்ந்த சித்த மருத்துவர்.



012345678900123456789001234567890

கட்டுரைகள்

பல்வேறு தமிழ் நாளிதழ்களிலும், வார மாத இதழ்களிலும் எழுதிய அனுபவம் உண்டு. பல தமிழ் தொலைக்காட்சிகளில் தோன்றி நோய் கட்டுப்பாடுகள் குறித்துப் பேசி பிரபலமானவர்.



01234567890012345678900123456789001234567890

ஆண்டு கால

குணப்படுத்திய அனுபவம். சித்த இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வமும், திறனும், சித்த மருத்துவம் பார்க்கும் அனுபவம், இவை இரண்டும் கலந்த கலவையாக மருத்துவர் வேலாயுதம் இருக்கிறார்.